விஜய்யின் ‘லியோ’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

  • March 14, 2023 / 02:18 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது இயக்கி வரும் புதிய படமான ‘லியோ’வில் ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இது விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 14-ஆம் தேதி) இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணமுள்ளனர். தற்போது, ‘லியோ’ படத்தின்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இக்கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus