விஜய் திரைப்பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

  • June 18, 2020 / 10:05 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜய் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘தமிழன்’. இந்த படத்தின் இயக்குனர் மஜித் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்ததாகவும், உதவி கேட்டு பல திரைப்பட பிரபலங்களிடமும் இயக்குநர்களிடமும் சென்றிருக்கிறார் ஆனால் உதவிக்கு யாரும் முன்வராத நிலையில், தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் இவர் சிகிச்சைக்கு உதவியுள்ளார்.

இயக்குனர் மஜித் ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் பல சமுதாய கருத்துகளை எடுத்து கூறியவர். இவர் வெற்றி படங்கள் ஏதும் பெரிதாக கொடுக்கவில்லை என்றாலும் கருத்துகள் நிறைந்த கதைகளை இயக்கியிருக்கிறார்.

இவர் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்கு
போதிய பணம் இல்லாததால் பலரிடம் உதவி கேட்டிருந்தார் ,யாரும் உதவ முன்வராத நிலையில் தயாரிப்பாளர் கே .ஜி .ஆர் உதவியுள்ளார்.

திரைத்துறையில் பல அடிமட்ட நிலை கலைஞர்கள், படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus