சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கிய முதல் படமே கன்னட மொழியில் தான். அது தான் ‘பல்லவி அனு பல்லவி’. இதில் அணில் கபூர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி நடித்திருந்தார். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் மணிரத்னமிற்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து மலையாள மொழியில் ‘உணரு’, தெலுங்கு மொழியில் ‘கீதாஞ்சலி’, ஹிந்தி மொழியில் ‘தில் சே, குரு’, தமிழ் மொழியில் ‘பகல் நிலவு, இதயகோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம்’ என பல படங்கள் இயக்கும் வாய்ப்பு அமைந்தது. 1988-ஆம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார் மணிரத்னம். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.
இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் ப்ளான் போட்டுள்ளதாகவும், முதல் பாகம் அடுத்த ஆண்டு (2022) ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு ரூ.122 கோடி என தகவல் கிடைத்துள்ளது.