செல்வராகவனின் ‘பகாசூரன்’-க்காக இயக்குநர் மோகன்.ஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • February 23, 2023 / 08:45 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘பகாசூரன்’ கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். இதில் செல்வராகவனுடன் இணைந்து ‘சதுரங்க வேட்டை’ நட்டியும் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதாரவி, கே.ராஜன், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக இயக்குநர் மோகன்.ஜி ரூ.35 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus