தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோவாக நரேன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். இப்படத்தினை மிஷ்கின் இயக்கியிருந்தார். இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம். ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார். நேற்று (செப்டம்பர் 20-ஆம் தேதி) இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாள் என்பதால், அவரின் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். இது 2014-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘பிசாசு’ என்ற ஹாரர் படத்தின் பார்ட் 2-வாம். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘சைக்கோ’ படம் மூலம் ஃபேமஸான ராஜ்குமார் பிச்சுமணி நடிக்க உள்ளார்.
‘ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார். தற்போது, மிஷ்கினின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இப்பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், கெளதம் மேனன், லிங்குசாமி, சசி, பாலாஜி சக்திவேல் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனராம்.
1
2
@Rockfortent @kbsriram16 @Lv_Sri @andrea_jeremiah @ApvMaran @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/bSLqYc5uNg
— Mysskin (@DirectorMysskin) September 19, 2020
About today. Thank you @shankarshanmugh @menongautham pic.twitter.com/ZOnDtJesGE
— Mysskin (@DirectorMysskin) September 20, 2020