Kamal Haasan & Shah Rukh Khan : கமல் ஹாசன் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம்… இயக்குநர் யார் தெரியுமா?

  • November 14, 2023 / 09:35 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், கமல் ஹாசனின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணையவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லீ இயக்கவுள்ளாராம்.

இதில் கமல் ஹாசனுடன் இணைந்து பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ஷாருக்கானும் நடிக்கவிருக்கிறார். அட்லீ கடைசியாக இயக்கி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus