இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

  • August 31, 2020 / 10:27 PM IST

தமிழ் திரையுலகில் “அட்டகத்தி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “காலா” படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்து தற்போது ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

அட்டக்கத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” எனும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தனக்கென தனி ஸ்டைலை கடைப்பிடித்து வருகிறார் பா.ரஞ்சித்.

இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் “கபாலி”, “காலா” என்று இரண்டு படங்களை இயக்கினார். திரையுலகில் நுழைந்த சில காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கிய இயக்குனர் என்ற பெருமையை பெற்றார் பா.ரஞ்சித்.

சமீபத்தில் பா.ரஞ்சித் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும், ஆர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அவர் செய்தி வெளியிட்டு தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கையும் வெளியிட்டுள்ளார் பா.ரஞ்சித்.

தற்போது பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது அடுத்த படமான “குதிரைவால்” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டீல் நடிக்கிறார்கள். தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus