அடேங்கப்பா… ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக இயக்குநர் பாண்டிராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பார்ட் 1 வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதியும், ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ளது. கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா, பானுப்ரியா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக பாண்டிராஜ் ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.