முன்னோடிகளுக்கு மாலைச் சூட்டிய சீனு ராமசாமி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன்.
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து உள்ளார் .இந்த படத்தை தயாரிப்பாளர் R.K .சுரேஷ் வெளியிடுகிறார் .இந்த படத்தில் நடிகை காயத்திரி மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் .

இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர் . இந்த படத்தை பிரத்தியேக காட்சி மூலம் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஜுன் 24 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் திரைத்துறையின் முன்னோடிகளான முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இயக்குநர் சீனுராமசாமி, மேலும் இது குறித்து பேசிய அவர்
“தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்” என்றார்.

Share.