தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’ இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கர்ணன்’ என்ற படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி கொண்டிருக்கிறார்.
இவர் ஏற்கனவே கதிரை வைத்து ‘பரியேறும் பெருமாள்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கர்ணன்’ படத்தில் கதையின் நாயகியாக ரஜிஷா விஜயன் வலம் வருவாராம். மேலும், கௌரி கிஷன், யோகி பாபு, லால், அழகம் பெருமாள் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். தற்போது, ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இவர்கள் போடப்பட்டுள்ள பல வீடுகளின் செட்களை தீ வைத்து எரிப்பது போன்ற காட்சியை எடுக்க வேண்டுமாம். இதில் 500-க்கும் மேற்பட்ட நடிகர்களை நடிக்க வைத்தால் தான் அக்காட்சியின் இம்பேக்ட் இருக்குமாம். ஆனால், கூடிய விரைவில் அரசாங்கம் ஷூட்டிங் எடுக்க அனுமதி கொடுத்தாலும், குறைந்த நபர்கள் மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கண்டிஷன் போடப்படும். ஆகையால், இந்த க்ளைமேக்ஸ் காட்சியை திட்டமிட்டபடி எப்படி எடுப்பது? அல்லது க்ளைமேக்ஸையே மாற்றி விடலாமா? என்று இயக்குநர் மாரி செல்வராஜ் யோசித்து வருகிறாராம்.