வைரலாகும் சர்தார் பட இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் திருமண புகைப்படங்கள் !

  • February 13, 2023 / 11:20 AM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் சர்தார். இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார் . மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது .

இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் தற்போது கன்னட நடிகர் யஷை வைத்து படம் இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . ஆனால் இதுவரை இதைப்பற்றின அதிகார்வப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் சர்தார் படத்தின் படத்தின் இயக்குனர் மித்ரன் அவர்களுக்கு தற்போது திருமணம் நடந்துள்ளது இயக்குனர் பி.எஸ்.மித்ரனின் நண்பர்கள் மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் .மேலும் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது .

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus