தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தற்போது, தமிழில் ரீமேக்காகப்போகும் ஒரு புதிய படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. பெங்காலி திரையுலகில் கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் ரிலீஸான படம் ‘வின்சி டா’. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியிருந்தார். இதில் ருத்ரனில் கோஷ், ரித்விக் சக்ரபோர்த்தி, அனிர்பன் பட்டாச்சார்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் பெங்காலியில் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ சார்பில் கைப்பற்றியுள்ளார். தமிழ் வெர்ஷனுக்கான திரைக்கதை மற்றும் வசனத்தை தயாரிப்பாளர் தனஞ்செயனுடன் இணைந்து பிரபல இயக்குநர் ராம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
https://twitter.com/CreativeEnt4/status/1321310151417208838