சர்தார் படத்தை பார்த்த சீமான் ! என்ன சொன்னார் தெரியுமா ?

  • October 27, 2022 / 12:52 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் சர்தார் . இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ராஷி கண்ணா , ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் நடிகை லைலா முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ் ( கார்த்தி ) ஒரு விளம்பர வெறி கொண்ட அதிகாரி, பின்னர் அவர் இந்திய உளவுத்துறை அமைப்புகளின் இராணுவ ரகசியங்களைக் கொண்ட ஒரு முக்கியமான கோப்பை மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போது, கோப்பிற்கும், மாஸ்டர்-இன் மாறுவேடத்தில் இருக்கும் சந்திர போஸ் என்ற சர்தார் என்ற முன்னாள் உளவாளிக்கும் இடையே உள்ள தொடர்பை விஜய் கண்டு பிடிக்கிறார் . இப்படையாக சர்தார் படம் அமைந்துள்ளது .

நடிகர் கார்த்தி சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . அதனால் இந்த படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்நிலையில் சார்த்தர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதிகார்வப்பூர்வ வெளியாகி உள்ளது. சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய வீடியோ வெளியாகி கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் சர்தார் படத்தை பார்த்து உள்ளார் . படத்தை பார்த்துவிட்டு சீமான் படத்தின் உரையாடல் , ஒளிப்பதிவு , இசை , கார்த்தியின் நடிப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus