இயக்குனர் சீனு ராமசாமியின் பிறந்தநாள்!

  • October 13, 2020 / 09:51 PM IST

தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தனது எதார்த்தமான கதை மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தென்மேற்கு பருவகாற்று, கண்ணேகலைமானே, தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தற்போது இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் “மாமனிதன்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

தொடர்ந்து எதார்த்தமான கதைகளை இயக்கி அன்றாட வாழ்வில் வரும் பிரச்சினைகளை பற்றி பேசி ரசிகர்களிடையே தன் இயக்கத்திற்கு என தனி மரியாதையை பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்தால் கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் திரையரங்கிற்கு செல்வார்கள்.

இன்று சீனு ராமசாமி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு இவரது ரசிகர்களும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் வாழ்த்துக்களை இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus