தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தனது எதார்த்தமான கதை மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கண்ணேகலைமானே, தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களையும் இவர் இயக்கியுள்ளார். தற்போது இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் மாமனிதன் என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.
தற்போது சீனு ராமசாமியின் பேஸ்புக் பதிவில் அவருக்கு தற்போது திருமணம் நடந்ததாக ஒரு பதிவு வந்துள்ளது. இது புதிய அப்டேட்டால் வந்த குழப்பம் என்றும் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் மகள்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் விளக்கம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதை நகைச்சுவையாக தனக்கே இது ஷாக்காக இருந்தது என்றும் கூறியுள்ளார். இந்த பிழைக்கு வருந்துகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவறான தகவல்
எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம். pic.twitter.com/RTxuWsAiHX— Seenu Ramasamy (@seenuramasamy) October 7, 2020