இந்த நடிகரை சந்திப்பதே என் லட்சியம் – இயக்குனர் செல்வராகவன்
June 11, 2020 / 07:25 PM IST
|Follow Us
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரான செல்வராகவன் காதல்கொண்டேன், 7ஜிரெயின்போ காலனி, புதுப்பேட்டை ,ஆயிரத்தில் ஒருவன் போன்ற வெற்றி படங்களை தந்து தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவராவார்.
நடிகர் சூர்யா நடித்து வெளியான ‘என்ஜிகே ‘திரைப்படம் இவரது இயக்கத்தில் வெளிவந்த கடைசிப்படம். இதையடுத்து இவர் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் இந்த லாக் டவுனுக்கு பிறகு வெளியிடப்படலாம் என்று கருதப்படுகிறது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து இவர் புதுப்பேட்டை படத்தின் அடுத்த பாகத்தை இயக்கி வருவதாகவும் திரைப்பட வட்டாரம் கூறுகிறது.
இயக்குனர் செல்வராகவன் அவர் வாழ்க்கையில் ஒரு முறையேனும் சந்தித்துவிட வேண்டும் என்று நினைப்பது நடிகர் “கவுண்டமணி” என்று கூறியுள்ளார். அவரது அனைத்து படங்களையும் நகைச்சுவைகளையும் பார்த்து ரசித்திருக்கிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் கவுண்டமணியை வைத்து தனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் நீண்டநாட்களாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.