கிளாசிக் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய அனுபவப்பூர்வமான அனுபவத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காதல் கொண்டன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என பல கிளாசிக் படங்களுக்கு சொந்தக்காரர் செல்வராகவன். வியாபார ரீதியாக அவரின் படங்கள் பெருமளவு வெற்றி பெறவில்லை என்றபோது. அவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்தில் அவர் சூர்யாவை வைத்து இயக்கிய என்ஜிகே, விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. இதனை தொடர்ந்து புதுப்பேட்டை 2 படத்தின் திரைக்கதை அமைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள அவர், நேரத்தை எப்படி கழிப்பது என்பது குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
In life we can choose to be happy or sad. Choose being happy. Even if you don’t feel up to it, fake it for a few days. Then it will become a routine and you might forget that you are faking it and actually start feeling happy. My experience! #StayHappy #StayHomeStaySafe
— selvaraghavan (@selvaraghavan) April 24, 2020
அதில், “வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருக்க முடிவு செய்யலாம். மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்வு செய்யும் போது. நீங்கள் அந்த மகிழ்ச்சியை உணராத போதும், மகிழ்ச்சியாக இருப்பது போல கொஞ்சம் நினைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அது ஒரு வழக்கமாக மாறும், நீங்கள் அதை சும்மா விளையாட்டுக்கு செய்கிறீர்கள் என்பதை மறந்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணர ஆரம்பிப்பீர்கள். என்னுடைய அனுபவம் இது!”, என்று கூறியுள்ளார்.