திருப்பதி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்ற இயக்குநர் ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

  • January 23, 2023 / 10:09 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரெடியாகி வரும் புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘இந்தியன் 2’ மட்டுமில்லாமல் இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் ஒரு படமும், ஹிந்தி மொழியில் ஒரு படமும் இயக்குகிறார். இதில் தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார்.

ஹிந்தி மொழியில் உருவாகவிருக்கும் படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். ஷங்கரின் மகள் அதிதியும் சமீபத்தில் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கினார். அதிதிக்கு அமைந்த முதல் படமே டாப் ஹீரோக்களில் ஒருவரான கார்த்தியுடன் தான். அது தான் ‘விருமன்’ திரைப்படம்.

இப்போது அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்று இயக்குநர் ஷங்கர் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus