இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • August 18, 2023 / 12:50 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2, கேம் சேஞ்சர்’ என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ‘இந்தியன் 2’வில் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல்ஹாசனும், ‘கேம் சேஞ்சர்’-ல் டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ராம் சரணும் நடித்து கொண்டிருக்கிறார்கள். இவ்விரு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus