சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் சிங்கீதம் சீனிவாச ராவ். 1974-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘திக்கற்ற பார்வதி’. இது தான் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம். அதன் பிறகு டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனை வைத்து ‘ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், காதலா காதலா, மும்பை Xபிரஸ், மகளிர் மட்டும்’ ஆகிய படங்களை இயக்கினார்.
இது தவிர தமிழில் ‘சின்ன வாத்தியார், லிட்டில் ஜான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் சிங்கீதம் சீனிவாச ராவ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்கள் இயக்கியுள்ளார்.
தற்போது, இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் “கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி எனக்கு லேசான அளவில் ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.