‘சூர்யா 42’வின் ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா ‘சரிகம’ நிறுவனம்?

  • April 15, 2023 / 10:44 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவா படம், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சிவா இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டிலையும், ரிலீஸ் தேதியையும் நாளை (ஏப்ரல் 16-ஆம் தேதி) காலை 9:05 மணிக்கு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை ரூ.15 கோடிக்கு ‘சரிகம’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus