‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ரஜினி – கமல் பட இயக்குநர்… மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

  • April 16, 2021 / 12:26 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.பி.முத்துராமன். இவர் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து ‘ப்ரியா, முரட்டுக் காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, எங்கேயோ கேட்ட குரல், பாயும் புலி, அடுத்த வாரிசு, நான் மகான் அல்ல, மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், பாண்டியன், அதிசய பிறவி, ராஜா சின்ன ரோஜா’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

மேலும், இன்னொரு டாப் ஹீரோவான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனை வைத்து ‘சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், உயர்ந்த உள்ளம், ஜப்பானில் கல்யாணராமன், பேர் சொல்லும் பிள்ளை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில், 86 வயதான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ‘கொரோனா’ அறிகுறிகளுடன் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, ‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்டு வந்த எஸ்.பி.முத்துராமன் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இவர் அட்மிட் ஆகியிருக்கும் ‘MEDWAY’ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus