சரியாக திட்டமிடாத அரசு அமைப்பை கேள்வி கேட்போமா? என இயக்குனர் வெற்றிமாறன் ஊரடங்கு அறிவிப்பை சரமாரியாக சாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது, வட சென்னை இரண்டாம் பாகம் எடுக்க உள்ள நிலையில், இது வெப் சீரிஸாக கூட வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்குதல் காரணமாக மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெற்றிமாறன் லாக்டவுன் குறித்து அண்மையில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்த ஊரடங்கைப் பற்றி பேச வேண்டுமா, புறக்கணிக்கப் போகிறோமா? ஊரடங்கின் முதல் சில நாட்களில் மும்பையிலிருந்து திருச்சிக்கு நடந்து வந்த இளைஞர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் கதைகளை சொல்லப் போகிறோமா? அல்லது அவர்களை புறக்கணிக்கப் போகிறோமா? இதை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பைக் கேள்வி கேட்போமா?
அல்லது நடந்ததை மறந்து நகர்ந்து விடுவோமா? இந்த அமைப்பைக் கேள்வி கேட்போமா? அல்லது அதை ஒரு குறிப்பிட்ட மதம், சாதி, பகுதிக்கானதாக மாற்றும் மக்களைக் கேள்வி கேட்போமா?இதெல்லாம் நம்மை நாமே கேட்கவேண்டிய மிக முக்கியமான கேள்விகள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.