பிரபாஸின் ‘ப்ராஜெக்ட் K’-க்காக திஷா பதானிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

  • July 10, 2023 / 01:53 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் நாக் அஷ்வின் இயக்கும் ‘ப்ராஜெக்ட் K’ நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதனை ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகுகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடிக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் டாப் பாலிவுட் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைக்கிறார், டேனி சஞ்செஸ் லோபெஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சயின்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் தயாராகும் இப்படத்தின் கதைக்களம் 2050-ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்காக நடிகை திஷா பதானிக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus