ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் இது தானா ?

  • February 9, 2023 / 10:51 AM IST

பாலிவுட் படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த திஷா பதானி ‘சூர்யா 42’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் . சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார் . திஷா பதானியின் சமீபத்திய பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது

அந்த வீடியோவில் அற்புதமான ஸ்டண்ட் காட்சியை நிகழ்த்துவதைக் காண முடிகிறது . ‘சூர்யா 42’ படத்தில் திஷா பதானி தனது பாத்திரத்திற்கான பயிற்சியில் இருப்பதாகத் தெரிகிறது . சூர்யா 42 படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .

‘சூர்யா 42’ படம் ஒரு பீரியடிக் ஆக்‌ஷன் டிராமா என்றும், வரலாற்று காலகட்டங்களில் பயணிக்கும் என்றும், இப்படம் ஒரே நேரத்தில் 13 மொழிகளில் வெளியிட பெரும் பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் சூர்யா ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது, மேலும் நடிகர் சூர்யா தனது பாத்திரத்திற்கு சூப்பர் ஃபிட்டாக மாறி உள்ளார் . சமீபத்தில் ஒரு பிரமாண்ட அதிரடி காட்சி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus