நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இந்த படத்தி எழுதி இயக்கி இருந்தார் . லலித் இந்த படத்தை தயாரித்து இருந்தார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இசையமைப்பாளர் அனிருத் இது 25வது படமாக அமைந்துள்ளது .
2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது . மூன்று கட்டங்களாக நடந்த படப்பிடிப்பு மார்ச் மாதம் முழுவதமாக நிறைவடைந்தது . கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வந்தது .படம் வெளியான பிறகு இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பெரும்பாலான ரசிகர்கள் நடிகை சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்தை கொண்டாடி வருகின்றனர் .
இந்நிலையில் இந்த படத்தின் ஓ.டி.டியில் வெளியாக இருக்கிறது .மே 27-ஆம் தேதி இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது . இது தொடர்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
Here we go, #KanmaniPlusKhatija on #DisneyPlusHotstar from May 27.. ❤💚#LoveyouTwo #KaathuvaakulaRenduKaadhal @VijaySethuOffl @VigneshShivN @Samanthaprabhu2 #Nayanthara @anirudhofficial @7screenstudio @Rowdy_Pictures #KRK pic.twitter.com/RaPOL42Ncv
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 18, 2022