விஜய் மனைவி வாரிசு விழாவில் பங்கேற்காமல் வெளிநாடு சென்றது ஏன் ?
January 4, 2023 / 12:34 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் . இவர் தற்போது வம்ஷி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார் . வாரிசு படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இதனால் விஜய் ரசிகர்கள் அவளோடு இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர் .
வாரிசு படத்திற்கு சில தினங்களுக்கு முன் இசை வெளியீட்டு விழா நடந்தது . பொதுவாக விஜய்யின் படத்தின் அனைத்து விழாக்களிலும் விஜய்யின் மனைவி பங்கேற்பார் . ஆனால் இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கவில்லை . மேலும் அதற்கு முன் நடந்த இயக்குனர் அட்லீயின் மனைவியின் வளைகாப்பு விழாவிலும் விஜய் மனைவியுடன் வருமானால் தனியாக பங்கேற்று இருந்தார் .
இதை எல்லாம் வைத்து விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வாழவில்லை என்றும் இருவரும் விவாகரத்து ஆகப்போகிறது என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பேசிவருகின்றனர் . இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக தான் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு சென்று இருக்கிறார். எப்போதும் கணவர் குழந்தைகளுடன் பண்டிகை தினங்களை கொண்டாடி வரும் சங்கீதா இந்த வருடம் தன் அப்பாவின் அழைப்பை ஏற்று அங்கு சென்று இருக்கிறார்.
மேலும் நடிகர் விஜய்யும் வாரிசு இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் தனது மனைவியை காண சென்றுவிட்டார் . இந்த உண்மை தெரியாமல் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus