சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். ஹிந்தி சினிமாவை சேர்ந்த இவர் இப்படத்தில் மிரட்டலாக நடித்திருந்தார்.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தன் வயதான அம்மாவுடன் குடும்பத்தில் வசித்து வருகிறார். ஆனாலும் கொரோனா நோய் பரவாமல் தடுக்க 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் அவரின் மனைவி ஆலியா சித்திக் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் விட்டுள்ளாராம். கடந்த மே 7 ம் தேதியன்றே முதல் முறை அனுப்பப்பட்ட விவாகரத்து நோட்டீஸ்க்கு நவாசுதீன் எந்த பதிலும் தெரிக்கவில்லையாம்.
அதே போல கடந்த மே 13 ல் இரண்டாவது தடவையாக அனுப்பப்பட்ட இரண்டாம் நோட்டீஸ்க்கும் நவாசுதீன் அமைதி காத்து வருகிறாராம்.இந்நிலையில் ஆலியாவின் வழக்கறிஞர் இனி நடிகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.நவாசுதீன் ஆலியா திருமணமாகி 12 வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்ததோடு இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.