அனிருத் கொடுத்த அப்டேட் !

  • June 23, 2022 / 07:07 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மாறன் . இந்த படம் ஓ.டி.டியில் வெளியானது.கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷ் , மாளவிகா மோஹனன் ,ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர் . பெரிது எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிற படம் திருச்சிற்றமபலம் . மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்கி உள்ளார் . இவர் ஏற்கனவே நடிகர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி , குட்டி , உத்தமபுத்திரன் படங்களை இயக்கி இருந்தார் . திருச்சிற்றமபலம் படத்தில் நித்யா , ராஷி கன்னா ,பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . மேலும் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது . உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியீடுகிறார் .அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் . சில வருடங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார் . இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் முதல் பாடல் 24-ஆம் தேதி வெளியாக உள்ளது. தனுஷ் இந்த பாடலை எழுதி பாடியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணியில் ஒரு பாடல் வெளியாக உள்ளது இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus