விஜய்க்கு ரொம்ப பிடித்த படம் எது தெரியுமா…?

  • April 25, 2020 / 08:09 PM IST

விஜய்யின் பழைய பேட்டியில் அவருக்கு பிடித்த ஆல் டைம் ஃபேவரட் படம் குறித்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் விரைவில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அன்று இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை பல ரசிகர்கள் வெறியுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். பலருக்கும் மாஸ்டர் படம் ஆல்டைம் ஃபேவரட் படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் இணையதளங்களில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் டிக் டாக்கில், இதுவரை 1500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதேபோல குட்டி ஸ்டோரி 50 மில்லியன் பார்வைகளை கடந்து வருகிறது. இந்த பெரும் சாதனையை ரசிகர்கள் ஹேஷ்டாக் கை உருவாக்கி சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் ஆல் டைம் ஃபேவரட் படம் படம் குறித்து தற்போது பார்ப்போம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் அளித்த பேட்டியில் தன்னுடைய ஆல் டைம் ஃபேவரட் படம் பாக்யராஜின் இன்று போய் நாளை வா என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை எப்போது டிவியில் போட்டாலும் பார்ப்போன் என்று தெரிவித்த அவர், அதில் வரும் காமெடி சீன்கள் எவர்கிரீன் என்று கூறியுள்ளார். அந்த படத்தின் வசனம் அனைத்தும் தனக்கு அத்துபடி என்றும் விஜய் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus