அஜித் வடிவேலுடன் நடிப்பதை நிறுத்தியது ஏன் தெரியுமா…!

  • May 2, 2020 / 12:19 PM IST

ராஜா படத்திற்கு பின் வடிவேலுவுடன் நடிப்பதை அஜித் தவிர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

ஆரம்ப காலத்தில் கவுண்டமணியுடன் காமெடி செய்து வந்த அஜித், அதன்பின் அவரின் அடாவடி நடவடிக்கையால் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இது அஜித்தின் முடிவு இல்லையென்றாலும், இயக்குனர்களிடம் கவுண்டமணி அடாவடியாக நடந்து கொண்டதால் தான் இவ்வாறு இயக்குனர்கள் அந்த அதிரடி முடிவை எடுத்தனர். இதில் அஜித்திற்கு உடன்பாடில்லை என்றாலும் தாம் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக்கொண்டார்.

பின்னர் அஜித் வளர்ந்து பெரிய நடிகரான பின்னும் வடிவேலுடன் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். ராஜா என்ற படத்தில் நடிக்கும் போது வடிவேலுவின் நடவடிக்கைகள் பல அஜித்திற்கு எரிச்சலை உண்டு செய்தது. கவுண்டமணி செய்த அதே வேலையை செய்ய ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. தேவையில்லாமல் சீன்களில் தலையிடுவது, காமெடி என்ற பெயரில் அஜித்தையும் சக நடிகர்களை கிண்டலடிப்பது என ஓவராக வடிவேலு செய்ததால் காண்டான அஜித், அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் வடிவேலு இதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அவரது பாணியை தொடர்ந்ததால் அஜித் அவருடன் இனி நடிக்க கூடாது என முடிவு எடுத்து இதுவரை அதனை கடைபிடித்து வருகிறார். ஆனாலும் இருவரும் அவரவர் பாணியில் உச்சத்தை அடைந்தது வரலாறு.

பல ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாமலிருந்த வடிவேலு தற்போது அஜித்தின் பிறந்தநாள் அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். குறிப்பாக எந்த படத்தில் பிரிந்தார்களோ அந்த படத்தின் புகைப்படத்தை வைத்தே வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த வாழ்த்து மூலமாக வடிவேலு சமாதான தூது விட்டுள்ளதாகவும் விபரம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus