நடிகை லைலாவுக்கு பிடித்த ஹீரோயின் யார் தெரியுமா ?

  • October 27, 2022 / 04:42 PM IST

1999-வது ஆண்டு வெளியான படம் கள்ளழகர் . இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த். இவருக்கு ஜோடியாக படத்தின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லைலா. அதன் பிறகு பிதாமகன், பார்த்தேன் ரசித்தேன் , தில், தீனா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார் லைலா .2006-ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் ஆனது. அதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்க வில்லை .

இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் லைலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . சார்த்தர் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார் . இந்த படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஜி.வி.பிரகாஷின் இசையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் .

முன்னதாக நடிகை லைலா சர்தார் படத்தை விளம்பரப்படுத்த நிறைய பேட்டி கொடுத்து வந்தார் . அந்த வகையில் ஒரு பேட்டியில் லைலாவிடம் பிடித்த நடிகை யார் என்று கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த லைலா தனக்கு பிடித்த நடிகை சமந்தா என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus