தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்கள் பலர் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளனர் . இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் இயக்குநர் மிஷ்கின் .
இயக்குநர் மிஸ்கினின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . இவரது இயக்கத்தில் பிசாசு 2 படம் உருவாகியுள்ள நிலையில், இப்படம் எப்போது ரிலீஸாகுமென ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
தற்போது நடிகர் விஜய்யின் 67ஆவது படமான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மிஷ்கின் . நடிப்புக்காகவே மிஷ்கினுக்கு ஒரு நாள் சம்பளமாக 10 லட்சம் ரூபாய் வரை தயாரிப்பாளர்கள் தருகிறார்கள் என்று கூறப்படுகிறது . மேலும் லியோ படத்தில் மிஷ்கின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் தனது சம்பளத்தை 20 லட்சமாக உயர்த்த கூடம் என்றும் கூறப்படுகிறது .