அஜித் அடுத்து நடிக்கும் படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ?

  • January 24, 2023 / 11:02 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குநர் எச்.வினோத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் பேங்க் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் போன்ற புதிய கருத்துக்களை மக்களுக்கு எடுத்து காட்டி உள்ளார் இயக்குநர் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் நடிகர் அஜித் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரது 62 வது படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்திற்காக அஜித்துக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus