தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளது .
இது ஒரு பக்கம் இருக்க அதர்வா நாயகனாக நடிக்கும் பட்டது அரசன் படத்தையும் லைக்கா தயாரித்துள்ளது . ராஜ்கிரண் மற்றும் ராதிகா முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை சற்குணம் இயக்கி உள்ளார் . ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . ஆஷிகா ரங்கனாத் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் .
இந்நிலையில் பட்டத்து அரசன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது . வெளியான முதல் நாளில் இந்த படம் 0.35 கோடி வசூல் செய்து உள்ளது என்று கூறப்படுகிறது .