90களில் மிரட்டலான வில்லன் பாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த நடிகர் ஆனந்தராஜ் . தற்போது இவர் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . நானும் ரௌடி தான் , ஜாக்பாட் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது .
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர் அளித்த பேட்டியில், “சில படங்களில் சிறப்பாக நடித்தும் அந்த காட்சிகள் நீளம் கருதி வெட்டப்படுவது உண்டு. விக்னேஷ் சிவன் எனக்கு நல்ல நண்பர். தனது நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கவைத்தார். அந்தப் படத்தில் நான் செய்த காமெடி பலராலும் ரசிக்கப்பட்டது. ஆனால் அதில் வெட்டப்பட்ட காட்சிகள் அதிகம். அது எனக்கு வருத்தம் தான் என்று தெரிவித்துள்ளார் .
மேலும் எனது காட்சிகள் வெட்ட பட்டதிற்கு என்னை விட அதிகம் வருத்தப்பட்டது நடிகை நயன்தாரா தான் என்றும் படத்தில் வந்த காட்சிகளை விட கட் செய்த காட்சிகளில் இன்னும் ரசித்துச் சிரித்தேன்.. அதெல்லாம் கட் செய்யப்பட்டு விட்டதே என்று நயன்தாரா வருந்தியதாக ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார் .