வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர்கள் யார் யார் தெரியுமா ?

  • October 11, 2022 / 11:00 AM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் . அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது . எம்.ஜி.ஆர் ,கமல் என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தை இயக்க முயற்சி செய்தனர் . கோலிவுட்டின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது .

பொன்னியின் செல்வன் படத்தின் தலைப்பு அருள்மொழி வர்மன் ராஜ ராஜ சோழன் அவரை குறிக்கிறது . இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து இருக்கிறார் . தனது நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலிலும் சரி படத்திலும் சரி வந்தியத்தேவன் தான் ஆரம்பம் முதல் ரசிகர்களோடு தொடர்ந்து பயணிப்பான் . இந்த கதாபத்திரக்திக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது . பொன்னியின் செல்வன் நாவலை படித்த பெரும்பாலான வாசகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் வந்தியத்தேவன் . இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து அசத்தி உள்ளார் .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர்கள் பற்றி பார்ப்போம் . முதலாவதாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இந்த கதையை படமாக எடுக்க முதலில் எம்.ஜி.ஆர் தான் முயன்றார் . அப்போது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர் . அதன் பிறகு உலக நாயகன் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க ஆசைப்பட்டார் அப்பொழுது அவரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டார் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் நாவலை படித்த போது அவரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டார் . இப்படி இந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க ஆசைப்பட்ட பாத்திரத்தில் கார்த்தி நடித்து இருக்கிறார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus