பிக் பாஸ் 6 இந்த வார எலிமினேஷன் யார் தெரியுமா ?

  • December 3, 2022 / 06:37 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக அசீம் செயல்பட்டு வருகிறார் . மேலும் இந்த வாரம் ஏலியன் மற்றும் காட்டில் வசிக்கும் மக்கள் இடையே நடக்கும் போட்டி நடந்து வருகிறது . அசீம் கேப்டன் ஆன பிறகு வீட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறார் . குறிப்பாக சமைக்கும் அணியில் வாரம் வாரம் இருந்த நபர்களை மாற்றி உள்ளார் . மேலும் இந்த வாரம் நடந்த ஏலியன் மற்றும் காட்டு வாசி டாஸ்க் போட்டியாளர்களிடையே கடும் சண்டையை ஏற்படுத்தியது .

இந்நிலையில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் பற்றி தகவல் வெளியாகி உள்ளது . இந்த வாரம் குயின்சி வீட்டில் இருந்து வெளியேற்ற படுவார் என்று கூறப்படுகிறது . இதனால் குயின்சியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus