பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் பிரபலம் யார் தெரியுமா ?

  • October 16, 2022 / 12:27 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளரான ரக்சன் ,சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பாடகி ராஜலட்சுமி , விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திவ்யதர்ஷினி , மைனா நந்தினி ஆகியோர் இந்த ஆண்டு பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது இவர்கள் பிக் பாஸ் இல்லத்திற்கு செல்லவில்லை .


இந்நிலையில் நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . இவர் சமீபத்தில் விக்ரம் படத்தில் நடித்து இருந்தார் மேலும் தீபாவளிக்கு வெளியாகும் சார்தார் படத்திலும் நடித்துள்ளார் . சின்னத்திரையில் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது . எனவே மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பல ரசிகர்களின் ஆதரவை பெறுவர் என்று நிச்சயம் நம்பலாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus