பிக் பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் யார் தெரியுமா ?

  • November 7, 2022 / 11:58 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரம் ஆகிவிட்டது . இந்த வார டாஸ்கில் போட்டியாளர்கள் அந்த தொலைக்காட்சி , இந்த தொலைக்காட்சி என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர் . பல நடன நிகழ்ச்சிகள் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , ராசி பலன்கள் என போன வாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது . மேலும் போன வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர் செரீனா வெளியேற்ற பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன் பதவிக்கு போட்டி நடந்து உள்ளது . இதில் ராபர்ட் மாஸ்டர் , அமுதவாணன் , மைனா நந்தினி மூவரும் போட்டி போட்டனர் . இந்த போட்டியில் மைனா நந்தினி வெற்றி பெற்று புதிய கேப்டன் ஆகி உள்ளார் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus