தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு பீட்சா, சூது கவ்வும் , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற தொடர்ந்த அடுத்து அடுத்து வெற்றி படங்களில் நடித்தார் . தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் ஆனார் . அதன் பிறகு ரஜினி , விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார் . மேலும் தெலுங்கு , ஹிந்தி , போன்ற படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .
இவர் வில்லனாக நடித்த படம் அனைத்தும் மிக வெற்றி படங்களாக அமைந்தது . சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . விஜய் சேதுபதி தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழிகளில் பிசியாகி நடித்து வருகிறார் .
இது ஒரு பக்கம் இருக்க தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . சுந்தர் .சி இயக்கி வரும் பேய் பட வரிசையில் தற்போது அரண்மனை 4 படத்தை இயக்க உள்ளார் அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் . முதன் முறையாக விஜய் சேதுபதி – சுந்தர்.சி காம்போவில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus