இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாலா . இவர் இயக்கத்தில் கடைசியாக திரையரங்கில் வெளியான படம் நாச்சியார் . இந்த படத்தில் ஜோதிகா , ஜி.வி.பிரகாஷ் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா வைத்து படம் இயக்கினார் . இந்த படம் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் . ஆனால் இந்த படம் சரியாக எடுக்கப்படவில்லை என்று கூறி படத்தை தயரிப்பாளர் நிராகரித்துவிட்டார் .
அதன் பிறகு அந்த படம் ஒ.டி.டி -யில் வெளியானது . இந்நிலையில் பாலா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வந்தார் . ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியில் நின்றது . இயக்குனர் பாலா வணங்கான் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய உள்ளார் அதனால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது . மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இயக்குனர் பாலா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதில் நடிகர் சூர்யா அவர்களுக்கு இந்த வணங்கான் கதை பொருந்தாது அதனால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார் மேலும் இருவரும் வேறு ஒரு படத்தில் மீண்டும் நிச்சயம் இணைவோம் என்று தெரிவித்தார் .
வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிய பின்பு அந்த படத்தில் யார் நாயகனாக நடிக்க உள்ளார் என்ற கேள்வி எழுந்தது இந்நிலையில் இயக்குனர் பாலா தற்போது நடிகர் அதர்வாவை அந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .