தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு . இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . இந்நிலையில் வெங்கட் பிரபு தற்போது
நாக சைதன்யாவின் கஸ்டடி . படத்தை இயக்கி வருகிறார் . இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் .
வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் பிரபு அவர்களின் தந்தை கங்கை அமரன் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . தனது தந்தை கங்கை அமரனுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் . மேலும் அவரது தம்பி பிரேம்ஜி அவர்களும் இந்த புகைப்படத்தில் உள்ளார். தற்போது இந்த படம் வைரலாகி வருகிறது .