இந்த வார பிக் பாஸ் கேப்டன் யார் தெரியுமா ?

  • December 12, 2022 / 07:32 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 60 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு மைனா, ரட்சிதா , அமுதவாணன் போட்டி போட்டனர் . போட்டியில் மைனா வென்று பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி உள்ளார் . இதனால் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெறவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க இந்த நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன் , விக்ரமன் , ஜனனி , ஏ.டி.கே , அஸிம் ,ரட்சித்தா ஆகியோர் தேர்வாகி உள்ளனர் . இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது .

மேலும் இன்று வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில் ஷிவின் மற்றும் தனலட்சுமி இடையே கடும் வாக்குவாதம் எழுந்து உள்ளது . பொதுவாக ஷிவின் யாரிடமும் பெரிய அளவில் கத்தி சண்டை போட மாட்டார். இந்நிலையில் இந்த ப்ரோமோவில் ஷிவின் கத்துவது ரசிகர்களுக்கு சற்று புதிதாக உள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus