தளபதி 67-ல் நடிக்க அர்ஜுன் கேட்ட சம்பளம் இத்தனை கோடியா ?

  • December 22, 2022 / 02:22 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து உள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படம் 2023 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . சிம்பு குரலில் வெளியான இரண்டாவது பாடலான ” தீ தளபதி ” பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் இதனை தொடர்ந்து வெளியான சோல் ஆப் வாரிசு பாடலும் வரவேற்பை பெற்று வருகிறது .

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் அடுத்த நடிக்க உள்ள படம் தளபதி 67 படத்தின் பூஜை சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்தது . இந்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் . முக்கியமான வில்லன் பாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் .

இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடிக்க நடிகர் அர்ஜுனுக்கு 4 கோடி 50 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus