தளபதி 67-ல் நடிக்க மறுத்த விஷால் !

  • December 13, 2022 / 01:34 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படம் 2023 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது . இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . சிம்பு குரலில் வெளியான இரண்டாவது பாடலான ” தீ தளபதி ” பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் அடுத்த நடிக்க உள்ள படம் தளபதி 67 படத்தின் பூஜை சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்தது . இந்த படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் . த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் .

சில வாரங்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஷாலை சந்தித்தார் . அப்போது தளபதி 67 படத்தில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது . இந்நிலையில் சமீபத்தில் இது பற்றி பேசி உள்ள நடிகர் விஷால் தளபதி 67 படத்தில் நடிக்க லோகேஷ் என்னிடம் பேசியது உண்மை என்றும் ஆனால் தான் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் நிறைய உள்ளது என்றும் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிப்பதில்லை விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார் . மேலும் விஜய் நடித்த ரசிகன் படத்திலிருந்து நான் அவரின் ரசிகன் அவரை வைத்து படம் இயக்குவது மட்டுமே என் ஆசை என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus