நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்சநட்சித்திரமாக இருக்கிறார் . இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . வருகின்ற 2023 பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் இன்று கூறப்படுகிறது .
இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் தாய் ஷோபா தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக பல பாடல்களை பாடியுள்ளார் . நடிகர் விஜய்யுடன் இணைந்தும் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் . நடிகர் விஜய் மீது அவரது தாய் ஷோபா அதிகமான அன்பை உடையவர் . பல மேடைகளில் அதை அவர் வெளிப்படுத்தி உள்ளார் .
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா பிரபல வளையொலி சேனலில் சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் . அப்போது நடிகர் விஜய்க்கு போன் செய்து பேசினார் . இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யை ” ஜோ ” என்று அன்போடு அழைத்தார் . இதன் மூலம் நடிகர் விஜய்யின் செல்லப்பெயர் ” ஜோ ” என்று தெரிய வந்துள்ளது .