Priyanka Mohan : ‘டாக்டர்’ பட ஹீரோயின் பிரியங்கா மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • November 21, 2023 / 04:51 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவருக்கு அமைந்த முதல் படமே கன்னட மொழியில் தான் அமைந்தது. அது தான் ‘ஒந் கதே ஹெல்லா’. அதன் பிறகு தெலுங்கு மொழியில் ‘நானி’ஸ் கேங் லீடர்’ மற்றும் ‘ஸ்ரீகரம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.

‘நானி’ஸ் கேங் லீடர்’ படத்துக்கு பிறகு நடிகை பிரியங்கா மோகனுக்கு தமிழ் மொழியில் அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் தமிழ் மொழியில் 2 படங்களும், தெலுங்கு மொழியில் 2 படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 20-ஆம் தேதி) பிரியங்கா மோகனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின்
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus