டாக்டர் படத்தின் தெலுங்கு எத்தனை கோடி தெரியுமா ?

  • September 29, 2022 / 01:06 AM IST

2021 ஆண்டு இயக்குனர் நெல்சன் எழுதி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படம் டாக்டர் . இத்திரைப்படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார் . தனது சொந்த பேனரான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் கீழ் இந்த படத்தை தயாரித்தார் சிவகார்த்திகேயன் . அதேசமயம் KJR ஸ்டுடியோஸ் இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் பணியாற்றியது. இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்து இருந்தார் மற்றும் வினய் ராய் வில்லனாக நடித்து இருந்தார் . யோகி பாபு, மிலிந்த் சோமன், ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா சந்தோக் மற்றும் தீபா சங்கர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்து இருந்தனர் . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான பல தாமதங்களை தொடர்ந்து, டாக்டர் 9 அக்டோபர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது . குறிப்பாக செல்லமா செல்லமா என்கிற பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது .மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த டாக்டர் படம் உலக அளவில் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது .

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமத்தை 1.50 கோடிக்கு விற்று உள்ளது படக்குழு .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus