விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்!

  • July 8, 2021 / 10:29 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய ஷெடியூல் ஷூட்டிங் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Doctors Treatment For A Chennai Boy By Showing Vijay's Bigil1

இந்நிலையில், விஜய்யின் படத்தை போட்டு காண்பித்து மருத்துவர்கள் ஒரு சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னையை சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகனான 10 வயது சிறுவன் சசிவர்ஷன் நேற்று முன் தினம் அவரது உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தூக்க கலக்கத்தில் கீழே விழுந்ததில் அவனுக்கு படு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் முதலில் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருந்திருக்கிறான்.

பின், அங்கிருந்த தன்னார்வலர் ஜின்னா அச்சிறுவனிடம் பேச்சு கொடுத்து, அவனுக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டார். உடனே, அவர் தன் மொபைலில் இருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்திருக்கிறார். சிறுவன் அப்படத்தை பார்த்து கொண்டிருந்த வேளையில் மருத்துவர்கள் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இயக்குநர் அட்லி இயக்கியிருந்த ‘பிகில்’ படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். முக்கிய ரோல்களில் நயன்தாரா, விவேக், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus